கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், திருத்தந்தை லியோ XIV தலைமையில் வத்திக்கானில் கடந்த ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற்ற இரண்டாவது விசேட கர்தினால்கள் பேரவையில் (Extraordinary Consistory) பங்கேற்றார்.
உலகம் முழுவதிலுமிருந்து 178 கர்தினால்கள் கலந்துகொண்ட இந்த விசேட ஆலோசனைக் கூட்டம், திருச்சபை மற்றும் உலகம் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் குறித்து ஆராய்வதற்காக நடத்தப்பட்டது.
நிகழ்வுகள் புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியுடன் ஆரம்பமாகி, பின்னர் போல் VI மண்டபத்தில் நான்கு அமர்வுகளாக தொடர்ந்தன.
இதன்போது,
திருச்சபையின் தற்போதைய நிலை,
உலக அமைதியை மேம்படுத்துதல்,
சினடாலிட்டி (Synodality) செயல்முறை,
திருத்தந்தையின் புதிய Magnifica Humanitas சுற்றுமடல்
ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நீண்டகால ஆன்மீக மற்றும் மேய்ப்புப் பணியனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, கர்தினால் மெல்கம் ரஞ்சித் தனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்து பேரவையின் விவாதங்களில் பங்களித்தார்.
இந்த விசேட பேரவை, ஜூன் 29 ஆம் திகதி புனித பேதுரு மற்றும் பவுல் திருநாளை முன்னிட்டு திருத்தந்தை தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.





