நாட்டின் பிரதான உணவாக மட்டுமல்லாமல், அரிசியை பல்வேறு உற்பத்திப் பொருட்களுக்கும் பயன்படுத்தும் வகையில் நீண்டகால வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்து வருவதாக வேளாண்மை அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், நெல் மூலம் உற்பத்தியாகும் அரிசியை உணவுப் பயன்பாட்டைத் தாண்டி பல்வேறு தொழில்துறை உற்பத்திகளிலும் பயன்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு சந்தைப் போட்டியின் மூலம் பாதுகாப்பு வழங்குவதும், அவர்களுக்கு உள்ள தடைகளை நீக்குவதும் இந்த நீண்டகாலத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.





