வெனிசுலாவில் அதிசய மீட்பு – 8 நாட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நபர் உயிருடன் மீட்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த வணிக வளாகத்தின் இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கியிருந்த 43 வயதுடைய பாதுகாப்பு அதிகாரி ஹெர்னான் அல்பெர்டோ கில் ஃப்ளோரஸ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

விடியோ லிங்க : https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1272

La Guaira பகுதியில் அமைந்திருந்த Galerías Playa Grande வணிக வளாகம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, வெனிசுலா, சிலி, கோஸ்டாரிகா, எல் சால்வடோர், அமெரிக்கா, போர்ச்சுகல் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் மீட்புக் குழுக்கள் 100 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளை அகற்றி அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டன.

மீட்புக் குழுவினர் குறுகிய குழாய் மூலம் தண்ணீர் மற்றும் திரவ ஊட்டச்சத்துகளை வழங்கி அவரை உயிருடன் வைத்திருந்தனர். அவர் இருந்த பாதுகாப்பு அறை முழுமையாக இடிந்து விழாததால், சிறிய காற்று இடைவெளி உருவாகி அவரது உயிர் காக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் முகமூடி அணிவிக்கப்பட்ட நிலையில் ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டுவரப்பட்ட அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த மீட்பு நடவடிக்கை, 2,200-க்கும் அதிகமான உயிரிழப்புகளையும் 11,000-க்கும் மேற்பட்ட காயங்களையும் ஏற்படுத்திய வெனிசுலா நிலநடுக்க பேரழிவின் மத்தியில் நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore