அம்பாரை, உகன பிரதேசத்தை சேர்ந்த சதுன் பிரதீப் மதுரங்க சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் நிருவாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற்கு பதவியுயர்வு பெற்று, நிருவாக உத்தியோகத்தராக நியமனம் பெற்ற சதுன் பிரதீப் மதுரங்க, நேற்று (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையினை அறிக்கையிட்டு, பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களிடம், புதிய சேவை நிலையத்துக்கான கடிதத்தினையும் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தனது புதிய சேவை நிலையமான சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினமே அவர், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
வைத்தியசாலையின் நிருவாகச் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்கான புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள திரு. சதுன் பிரதீப் மதுரங்கவுக்கு, சுகாதாரத் துறைசார்ந்த பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





