ஐரோப்பாவை கடந்த ஜூன் மாத இறுதியில் தாக்கிய கடுமையான வெப்ப அலையால் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் இதுவரை 3,700-க்கும் அதிகமான கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ஆரம்பகட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
🇫🇷 பிரான்ஸ் – 2,025 உயிரிழப்புகள்
🇧🇪 பெல்ஜியம் – சுமார் 1,200 உயிரிழப்புகள்
🇳🇱 நெதர்லாந்து – சுமார் 480 உயிரிழப்புகள்
குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 20 முதல் 28 வரை பதிவான இந்த வெப்ப அலை, ஐரோப்பா வரலாற்றில் மிகவும் தீவிரமான வெப்ப அலைகளில் ஒன்றாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மேலும், இந்த அசாதாரண வெப்பநிலைக்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிகாரிகள், மேலும் தகவல்கள் கிடைக்கப் பெறும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர்.





