வளத்தாப்பிட்டியில் 57 வயதுடைய நபர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு; மரண விசாரணைக்கு உத்தரவு!!

மஜீட். A.R.M ,  வசீம்

சம்மாந்துறை பழைய வளத்தாப்பிட்டி, காளி கோயில் வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் இன்று (03) மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகிலுள்ள ஆள் நடமாட்டம் குறைவான வளவு ஒன்றில் குறித்த நபரின் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார், சடலத்தை பார்வையிட்டு ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், நாளை (04) காலை மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore