இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா மோசமான சாதனை

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்து முடிந்த அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டி தொடரை அடுத்து, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

நேற்று (4) நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் வைபவ் சூர்யவன்ஷி நேற்றைய போட்டியின் ஊடாக சர்வதேச போட்டியில் 15 ஆவது வயதில் அறிமுகமாகி, சச்சினின் 36 வருட கால சாதனையை தகர்த்துள்ளார்.

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானமையே சாதனையாக இருந்தது.

எவ்வாறாயினும் நேற்றைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இஷன் கிஷன் 49 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் 191 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான இரு டி20 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது.

அதன்பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, முடிவு தெரியாமல் போனது. பின்னர் போட்டி ரத்து செய்யப்பட்டது.

2-வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இதனால், 2021-ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த டி20 போட்டிகளில் முதன்முறையாக, மூன்று டி20 போட்டிகளில் அடுத்தடுத்து, இந்தியா தோல்வியை சந்தித்து மோசமான நிலையை அடைந்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore