கொழும்பு கோட்டையில் தடம் புரண்ட ரயில்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 4.45 மணிக்கு ரம்புக்கனை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் பெட்டியொன்று தடம் புரண்டுள்ளது.

இன்று (07) பிற்பகல் 4.50 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் மேடைக்கு அருகில் வந்துகொண்டிருந்த போதே இந்த தடம் புரளல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் நான்கு ரயில் மேடைகள் (Platforms) பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகும் பல ரயில் சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore