ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று காலை 6.15 மணி நிலவரப்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.04 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 2.27 சதவீத வளர்ச்சியாகும்.
பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.78 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 2.18 சதவீத உயர்வாகப் பதிவாகியுள்ளது.
அதேநேரம், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மர்பன் (Murban) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.97 டொலர்களாகக் காணப்படுவதுடன், இது 3.43 சதவீத உயர்வாக பதிவாகியுள்ளது.





