அசுரன் படத்தின் கதாசிரியர் பூமணி காலமானார்

சாகித்திய அகடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பூமணி தமது 79 வது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (12) இரவு 11 மணியளவில் சென்னையில் அவர் காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிநகர் மேட்டுத் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் இன்று மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் பிறந்த எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூலித்துரை மாணிக்கவாசகம்.

பூமணி, தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமையாக கருதப்படுகிறார்.

அவரது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக 2014-ம் ஆண்டிற்கான சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டது.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தின் கதாசிரியர் பூமணி ஆவார்.

அவரது வெக்கை நாவலை தழுவியே அசுரன் திரைப்படம் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore