2025 ஆம் ஆண்டுக்கான General Information Technology (GIT) பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று (20.07.2026) வெளியிட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை சுட்டெண்ணை (Index Number) பயன்படுத்தி www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாக தங்களது பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
இந்தப் பரீட்சைக்கு மொத்தமாக 200,235 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 199,598 பேர் பாடசாலை மாணவர்களும், 637 பேர் தனியார் பரீட்சார்த்திகளும் ஆவர். இதில் 147,407 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
இந்தப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 1,669 பரீட்சை நிலையங்களிலும், 325 ஒருங்கிணைப்பு நிலையங்களின் ஒத்துழைப்புடனும் நடைபெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 2026 ஜூலை 23 முதல் பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் மூலம் இணையவழி பரீட்சை சேவையின் ஊடாக உத்தியோகபூர்வ பெறுபேறு அறிக்கையை (Result Sheet) பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதேபோல், பாடசாலைகள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கும் தங்களது உள்நுழைவு தகவல்களைப் பயன்படுத்தி பெறுபேறு அறிக்கைகளை பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் தேவையெனில், 1911 என்ற உதவி இலக்கத்தை அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் School Examinations Organisation and Results Branch-ஐ தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





