உலகக்கிண்ண இறுதிப் போட்டி தோல்வி : ரசிகர்களுக்கு மனம் திறந்த மெஸ்ஸி

உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

“இந்தத் தோல்வியின் வலி மிகப் பெரியது. இந்தக் காயம் ஆறுவதற்கு காலம் தேவைப்படும். ஆனால், எங்கள் அணி முழு அர்ப்பணிப்புடன் போராடி வென்ற போட்டிகளையும், என்றும் நினைவில் நிற்கும் தருணங்களையும் நான் நினைவில் வைத்திருக்க விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒட்டுமொத்த நாட்டின் ஆதரவும், அணியின் கடின உழைப்பும் எங்களை மீண்டும் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக மாற்றியது. இன்று நாம் அடைந்த சாதனையின் மகத்துவத்தை உணர முடியாமல் இருக்கலாம். இருப்பினும், தொடர்ச்சியாக இரண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியிருப்பது மிகப்பெரிய சாதனையாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் வழங்கிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்த மெஸ்ஸி, “மீண்டும் ஒருமுறை ஒரு நாடாக ஒன்றிணைந்து, அர்ஜென்டினராக இருப்பதில் பெருமையைப் பகிர்ந்துகொண்டோம்” என கூறியுள்ளார்.

அதேவேளை, உலகக்கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணிக்கும் தனது வாழ்த்துகளை லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore