டிரம்பின் ஆதரவுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோவை அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பொதுச் செயலாளராக நியமிக்க விரும்புவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2026 கால்பந்து உலகக் கோப்பை தொடரை ஒருங்கிணைத்ததன் மூலம் டிரம்ப் மற்றும் இன்பான்டினோ இடையே நெருக்கமான உறவு உருவானதாக கூறப்படுகிறது. உலக நாடுகளை ஒன்றிணைக்கும் திறன் இன்பான்டினோவுக்கு இருப்பதாக டிரம்ப் நம்புவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய பொதுச் செயலாளர் தேர்வு இந்த ஆண்டிலேயே நடைபெற உள்ளது.

எனினும், இந்தப் பதவிக்கு இன்பான்டினோ போட்டியிடுவாரா என்பது இதுவரை உறுதியாகவில்லை. அவர் தற்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA தலைவர் தேர்தலிலும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கு, பாதுகாப்பு சபையின் ஒப்புதலையும் பின்னர் பொதுச் சபையின் அங்கீகாரத்தையும் பெற வேண்டும்.

(New York Post)

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore