2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேகநபராக முன்னிலையான முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) பிணை வழங்கியுள்ளது.

வழக்கில் ஆதாரங்களை மறைக்க உதவியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. முன்னதாக நீதிமன்றம் விடுத்திருந்த அறிவித்தலின் அடிப்படையில் நீதிமன்றில் ஆஜரான அவர், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து குற்றமற்றவர் என தெரிவித்தார்.

இதனையடுத்து, நீதவான் பசன் அமரசேன, தலா ரூ.10 இலட்சம் பெறுமதியான இரண்டு தனிப்பட்ட பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை 2026 டிசம்பர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore