கிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் சாதனை

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடர் – 2026 இல், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

கல்முனை சாந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூலை 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பங்குபற்றிய சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய அணி பலத்த போட்டிகளுக்கு மத்தியில் மூன்றாம் இடத்தை (2nd Runner Up – Bronze Medal) பெற்றுக்கொண்டது.

இதன் மூலம் அணிக்கு சான்றிதழ்கள் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவர் வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அணியை வழிநடத்திய சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர்களான A.C. Mohamed Nawas மற்றும் A. Haleem Ahmath ஆகியோருக்கும், ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களான KLM. Sabry Sir, ZA. Sitthy Rumaiza, Fasliya Tr, Faazila Tr மற்றும் Fathima Tr ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் கல்லூரி முதல்வர் அல்-ஹாஜ் ARM. Uwais (Naleemi) SLPS-1 அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore