இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா 10% புதிய வரி

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம், இலங்கை உள்ளிட்ட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய சுங்க வரிகளை அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படவுள்ளது.

கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் தளர்வாக அமுல்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனா உள்ளிட்ட 38 நாடுகளின் பொருட்களுக்கு 12.5% வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் இந்த புதிய வரி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore