மியான்மரில் மீண்டும் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 9.36 மணியளவில், 121 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு மியான்மரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன.





