கொழும்பில் புதிய 7 லங்கா மெட்ரோ போக்குவரத்து பேருந்து வழித்தடங்கள் அறிமுகம்

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பயணிகளுக்கான பொது போக்குவரத்து சேவையை மேலும் திறம்படவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் வழங்கும் நோக்கில், லங்கா மெட்ரோ டிரான்சிட் திட்டத்தின் கீழ் புதிய 7 பேருந்து வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பேருந்து வழித்தடங்கள் பின்வருமாறு:

  • மக்கும்புர – பேட்டை (23.3 கிலோமீற்றர்)
  • மில்லேனியம் சிட்டி – கொழும்பு கோட்டை (22.3 கிலோமீற்றர்)
  • கடவத்தை – மக்கும்புர (34.8 கிலோமீற்றர்)
  • தெமட்டகொட – பாணந்துறை (28.7 கிலோமீற்றர்)
  • பத்தரமுல்ல – ஏக்கல (29.9 கிலோமீற்றர்)
  • கொள்ளுப்பிட்டி சுற்றுப்பாதை (14 கிலோமீற்றர்)
  • கெஸ்பேவ – பேட்டை (35.7 கிலோமீற்றர்)

இந்த புதிய வழித்தடங்கள் மூலம் கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இடையிலான இணைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், பயணிகளுக்கு வசதியான மற்றும் நம்பகமான பொது போக்குவரத்து சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore