பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி யூஜினி (Princess Eugenie), போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
குழந்தை திங்கட்கிழமை மாலை 6.20 BST மணிக்கு பிறந்ததாகவும், பிறப்பு எடை 6 பவுண்ட் 9 அவுன்ஸ் (சுமார் 2.98 கிலோ) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இளவரசி யூஜினி மற்றும் அவரது கணவர் ஜாக் புரூக்ஸ்பேங்க் (Jack Brooksbank) தம்பதியின் மூன்றாவது குழந்தையாகும்.
ஏற்கனவே இவர்களுக்கு:
August Philip Hawke Brooksbank (2021)
Ernest George Ronnie Brooksbank (2023)
என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா உள்ளிட்ட அரச குடும்ப உறுப்பினர்கள் இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசி யூஜினி தனது Instagram பதிவில்,
“நானும் ஜாக்கும் எங்கள் பெண் குழந்தையை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் மகளை அளவற்ற அன்புடன் நேசிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
குழந்தைக்கு இதுவரை பெயர் அறிவிக்கப்படவில்லை.
புதிய குழந்தை அரச வாரிசு வரிசையில் 15வது இடத்தில் இருக்கும். இந்த குழந்தைக்கு HRH (His/Her Royal Highness) பட்டம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசி யூஜினி மற்றும் ஜாக் புரூக்ஸ்பேங்க் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்கள் போர்ச்சுகல் மற்றும் கென்சிங்டன் அரண்மனை வளாகத்தில் உள்ள Ivy Cottage ஆகிய இடங்களுக்கு இடையில் வசித்து வருகின்றனர்.





