கொழும்பு ரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீசப்பட்ட கைக்குண்டுகளில் ஒன்று வெடித்துள்ளதுடன், மற்றொன்று வெடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், வீட்டிற்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் என்பதையும், தாக்குதலுக்கான காரணத்தையும் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





