செப்டம்பர் 5 முதல் நாடு முழுவதும் விசேட மக்கள் பேரணிகள் – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விசேட மக்கள் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் இணைந்ததாக, கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கோட்டச் சபைகளை மீளமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு காணப்படுவதாக கூறுபவர்கள், அதனை மக்கள் பேரணிகள் மூலம் நிரூபிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தற்போது கிராம மட்டத்திலும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும் தனது அமைப்பு ரீதியான நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சியாக இருந்த காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்த வேலைத்திட்டங்களையும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore