இரத்தினபுரி, எஹலியகொட பகுதியில் அமைந்துள்ள கல் பொத்தஹேன குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மீகஹவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞர் மேலும் நான்கு நண்பர்களுடன் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





