டி20 கிரிக்கெட்டில் வேற லெவல் சாதனை படைத்த ஜாஸ் பட்லர்!

மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணித்தலைவர் ஜாஸ் பட்லர், முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவர் கீரன் பொல்லார்டை முந்தி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ‘தி ஹன்ட்ரட்’ தொடரில், வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிரான சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆட்டத்தின்போது பட்லர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

வெறும் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை விளாசி, 156 ஓட்டங்கள் என்ற இலக்கை ஒன்பது விக்கெட்டுகள் மற்றும் 31 பந்துகள் மீதமிருக்க சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி துரத்தி பிடிக்க உதவினார்.

பட்லர் தற்போது 491 டி20 இன்னிங்ஸ்களில் 14,833 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இது, 14,803 ஓட்டங்களுடன் இருக்கும் பொல்லார்டை விட 30 ஓட்டங்கள் அதிகம். பொல்லார்டின் மேற்கிந்திய தீவுகள் அணியின் சக வீரரான கிறிஸ் கெய்ல், 14,562 ஓட்டங்களுடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore