கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா! பாதுகாப்பிற்காக 1000 பொலிஸார்!

தெரண – சிக்னல் கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவின் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புக்காக சுமார் 1,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருவிழா எதிர்வரும் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

விழாவின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் வாகனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பேரணியானது காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி, கொள்ளுப்பிட்டி சந்தி, தர்மபால மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆர்.ஏ. டி மெல் மாவத்தை, பம்பலப்பிட்டி சந்தி, பௌத்தலோக மாவத்தை, தும்முல்லை, தேர்ஸ்டன் வீதி, கிளாஸ் ஹவுஸ், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர மாவத்தை, பொது நிர்வாகம், மெய்ட்லண்ட் கிரசென்ட் சந்தி, ஹோட்டன் மெய்ட்லண்ட் கிரசென்ட், ஹோட்டன் சுற்றுவட்டம், கன்னங்கர மாவத்தை, சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், இப்பன்வில சந்தி, டாலி வீதி, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, ரீகல் சந்தி, செரமிக் சந்தி, லோட்டஸ் வீதி, என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் ஊடாக துறைமுக நகரத்தில் நிறைவடைகிறது.

அதற்கமைய, சனிக்கிழமை (08) அன்று இந்தத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் மேற்கண்ட பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் சில வீதித் தடங்கல்கள் ஏற்படலாம்.

எனவே, மேற்கண்ட வீதிகளைத் தவிர்த்து வேறு மாற்று வழிகளைப் பயன்படுத்துவது பொருத்தமானது என பொதுமக்கள் மற்றும் சாரதிகளுக்கு அறிவிக்கப்படுவதுடன், அவசியமான வேறு தேவைகளின் போது போக்குவரத்துப் பொலிஸார் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2026.08.09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகை தரும் வாகனங்களை நிறுத்தக் கூடிய இடங்கள் பின்வருமாறு:

எம்.ஓ.டி தள வாகன நிறுத்தம்

ஷாங்கிரி-லா அருகிலுள்ள கொங்ரீட் தளம்

சைத்திய வீதி

யோர்க் வீதி – செத்தம் வீதி சந்தி முதல் பழைய பொலிஸ் தலைமையகம் வரை

லேடின் பெஸ்டியன் மாவத்தை வீதியின் இரு மருங்கிலும்

கீழ் லோட்டஸ் வீதியின் இடது பக்கம்

டியூக் வீதி வீதியின் இரு மருங்கிலும்

பிரிஸ்டல் வீதி வீதியின் இரு மருங்கிலும்

பரோன் ஜெயதிலக மாவத்தை வீதியின் இரு மருங்கிலும்

டி.ஆர். விஜேவர்தன மாவத்தை வீதியின் இடது பக்கம்

பார்சன் வீதி வீதியின் இரு மருங்கிலும்

போர்ட் சிட்டி வளாகம்

கடல் வீதி கடல் பகுதி பக்கமுள்ள வாகன நிறுத்துமிடம்

கடல் வீதி – கொள்ளுப்பிட்டி ரயில் நிலைய வீதி சந்தி முதல் ஸ்டுவர்ட்ஸ் ஒழுங்கை வரை வீதியின் இரு மருங்கிலும்

ஆனந்த குமாரசுவாமி மாவத்தை (கிரீன் பாத்) வீதியின் இரு மருங்கிலும்

தர்மபால மாவத்தை விஹாரமகாதேவி பூங்காப் பக்கம்

கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தக் கூடிய இடங்கள்:

யூனியன் பிரதேசம் – எக்சஸ் டவர் வாகன நிறுத்துமிடம்

காமினி சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள தனியார் வாகன நிறுத்துமிடம்

லேக்ஹவுஸ் எதிரிலுள்ள கீழ் தரை வாகன நிறுத்துமிடம்

சால்மர்ஸ் வாகன நிறுத்துமிடம்

பழைய மெனிங் சந்தை வாகன நிறுத்துமிடம்

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore