விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் சங்கீதா!

தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவருமான விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக நடைபெற்ற 15 நிமிட விசாரணையின் போது, மனுவை வாபஸ் பெறுவதாக சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி சங்கீதா சார்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

காணொளி விசாரணை: பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் கருதி காணொளி முறையில் நடைபெற்ற விசாரணையில் இருதரப்பு கருத்துக்களும் கேட்கப்பட்டன.

மனுதாரரான சங்கீதா மனுவை திரும்பப் பெற சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கை முடித்துவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீண்ட நாட்களாக திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், மனு வாபஸ் பெறப்பட்டதன் மூலம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore