சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் இதற்கு முன்னர் மஹர சிறைச்சாலை அத்தியாட்சகராகவும், பயிற்சிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

சேனக்க பல்லேதென்ன காலி ரிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் பற்றிய கல்வியில் டிப்ளோமா படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.

மேலும், இந்தியாவின் கேரளாவில் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த முகாமை தொடர்பான டிப்ளோமா படிப்பையும் கற்றுள்ள இவர், போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலைத்தீவு, துருக்கி ஆகிய நாடுகளில் பல டிப்ளோமா படிப்புகளையும் பயின்றுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore