‘டொபியின் கல்லறையை’ காப்பாற்றிய Harry Potter ரசிகர்கள் – பல மில்லியன் பவுண்ட் மின்சாரத் திட்டத்தில் மாற்றம்

Harry Potter திரைப்படங்களில் பிரபலமான கதாபாத்திரமான Dobbyயின் நினைவிடத்தைப் பாதுகாப்பதற்காக, பிரித்தானியா–அயர்லாந்து இடையிலான பல மில்லியன் பவுண்ட் மதிப்பிலான மின்சார இணைப்புத் திட்டத்தின் பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

£430 மில்லியன் பெறுமதியான Greenlink Interconnector திட்டத்தின் கீழ், இங்கிலாந்தின் தேசிய மின்வலையமைப்பை அயர்லாந்துடன் இணைக்கும் வகையில் சுமார் 125 மைல் நீளமான மின்கம்பி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மின்கம்பி, Harry Potter திரைப்படங்களில் Dobby உயிரிழக்கும் காட்சி படமாக்கப்பட்ட வேல்ஸின் Freshwater West கடற்கரை வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

திட்டத்தின் மேலாளர் Simon Ludlam தெரிவித்ததன்படி, மின்கம்பி முதலில் Dobby-க்காக ரசிகர்கள் அமைத்திருந்த நினைவிடத்தின் ஊடாகச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

இதனை அறிந்த Harry Potter ரசிகர்கள், திட்ட நிறுவனத்திற்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து திட்டமிடுபவர்களுடன் கலந்துரையாடி, Dobby-யின் நினைவிடத்திற்கு அருகில் செல்லாத வகையில் மின்கம்பியின் பாதை மாற்றியமைக்கப்பட்டதாக Simon Ludlam தெரிவித்துள்ளார்.

Dobby என்பது உண்மையான மனிதர் அல்ல; Harry Potter புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களில் இடம்பெறும் கற்பனை கதாபாத்திரம் என்றாலும், அவரது திரைப்பட மரணக் காட்சி படமாக்கப்பட்ட Freshwater West கடற்கரை, ரசிகர்களுக்கான முக்கியமான நினைவிடமாக மாறியுள்ளது.

ரசிகர்கள் அங்கு சென்று ‘RIP Dobby’ உள்ளிட்ட செய்திகளை கற்களில் எழுதி வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், மின்கம்பியின் மாற்றியமைக்கப்பட்ட பாதை கி.மு. 1700–1500 காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் Bronze Age தொல்பொருள் எச்சங்களுக்கும் அருகில் சென்றதாக திட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dobby-யின் நினைவிடம் தொடர்பாக இது முதல் சர்ச்சை அல்ல. 2022ஆம் ஆண்டிலும் அந்நினைவிடம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்ட பின்னர், அதனை அங்கேயே தொடர அனுமதிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடற்கரை சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதி என்பதால், ரசிகர்கள் அங்கு நினைவுப் பொருட்கள் மற்றும் காலுறைகள் (socks) உள்ளிட்டவற்றை வைக்க வேண்டாம் என National Trust அறிவுறுத்தியிருந்தது.

“Dobby-யின் கல்லறை பாதுகாக்கப்பட்டுள்ளது; திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது” என திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore