2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்று ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 25 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் தேவையான பெறுபேறு மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் பெருமளவான மாணவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





