AIT, WHT மற்றும் APIT வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

ஜூலை 2026 மாதத்திற்கான வரிகளை ஆகஸ்ட் 15க்குள் செலுத்த வேண்டும்

கொழும்பு, ஆகஸ்ட் 13, 2026 – ஜூலை 2026 மாதத்திற்கான Advance Income Tax (AIT), Withholding Tax (WHT) மற்றும் Advance Personal Income Tax (APIT) வரிப் பொறுப்புகளை ஆகஸ்ட் 15, 2026க்குள் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது.

குறித்த வரிகளை Online Tax Payment Platform (OTPP) ஊடாக இணையவழியில் அல்லது Bank of Ceylon மற்றும் People’s Bank கிளைகளில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலக்கெடுவிற்குப் பின்னர் செலுத்தப்படும் வரிகள் தாமதமான வரி செலுத்தலாகக் கருதப்பட்டு அபராதங்கள் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஜூலை மாதத்திற்கான வரி செலுத்தலுக்குத் தேவையான விபரங்கள்:

  • AIT / WHT – Interest: Tax Type Code 43 | Payment Period Code 26070 | Payment Category S
  • AIT / WHT – Fees மற்றும் பிற கொடுப்பனவுகள்: Tax Type Code 44 | Payment Period Code 26070 | Payment Category S
  • APIT: Tax Type Code 03 | Payment Period Code 26070 | Payment Category S

வரி செலுத்துவோர் காலக்கெடுவுக்குள் தங்களது வரிப் பொறுப்புகளை நிறைவேற்றி, தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்குமாறு IRD வலியுறுத்தியுள்ளது.

மேலும், விரைவான மற்றும் இலகுவான முறையில் வரிகளை செலுத்துவதற்காக Online Tax Payment Platform (OTPP)-ஐ பயன்படுத்துமாறும் வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore