ஜூலை மாத வரிகளை ஆகஸ்ட் 20க்குள் செலுத்த வேண்டும் – VAT அறிக்கையை ஆகஸ்ட் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
கொழும்பு, ஆகஸ்ட் 13, 2026 – 2026 ஜூலை மாதத்திற்கான Social Security Contribution Levy (SSCL) மற்றும் Value Added Tax (VAT) தொடர்பான வரி செலுத்தல்கள் மற்றும் அறிக்கைகளை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை மாதத்திற்கான SSCL வரியை ஆகஸ்ட் 20, 2026க்குள் செலுத்த வேண்டும். இதனை Online Tax Payment Platform (OTPP) ஊடாக அல்லது Bank of Ceylon-ன் எந்தவொரு கிளையிலும் செலுத்த முடியும்.
SSCL செலுத்தலுக்கான விபரங்கள்:
- Tax Type Code – 32
- Period Code – 26301
- Payment Category – S
இதேவேளை, ஜூலை மாதத்திற்கான VAT வரியையும் ஆகஸ்ட் 20, 2026க்குள் செலுத்த வேண்டும். VAT தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 31, 2026க்குள் இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும்.
VAT செலுத்தலுக்கான விபரங்கள்:
- Tax Type Code – 70
- Period Code – 26310
- Payment Category – S
- Return Frequency – Monthly
- Return Period – July
- Return Period Code – 2631
காலதாமதமாகவோ அல்லது தவறான தகவல்களுடனோ வரி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டால் அபராதங்கள் விதிக்கப்படலாம் என IRD எச்சரித்துள்ளது.
மேலும், VAT அறிக்கை காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டால், உள்ளூர் கொள்வனவுகள் மற்றும் இறக்குமதிகளுக்கான Input Tax Credit பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் கொள்வனவுகளுக்கான Input Tax Credit-ஐ 12 மாதங்களுக்குள், இறக்குமதிகளுக்கான Input Tax Credit-ஐ குறித்த வரி செலுத்த வேண்டிய தேதியிலிருந்து 24 மாதங்களுக்குள் கோர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, வரி செலுத்துவோர் உரிய காலக்கெடுவுக்குள் தங்களது SSCL மற்றும் VAT கொடுப்பனவுகள் மற்றும் அறிக்கைகளை நிறைவேற்றி, அபராதங்களைத் தவிர்ப்பதுடன் Input Tax Credit பெறுவதற்கான தகுதியையும் பாதுகாத்துக்கொள்ளுமாறு IRD கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 1944 என்ற உதவி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம்.





