BREAKING : 2026 உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் எவ்விதத்திலும் கசியவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், திட்டமிட்டபடி நாளை (14) பரீட்சைகள் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டெம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறுவதுடன், 3,72,310 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore