ரூ.7.37 கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு – இருவர் கைது

மொனராகலை, அம்பேகமுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொமகல வீதியின் இறுதிப் பகுதியில், மவுஆர எல கரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது கடத்தலுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இந்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் ரூ.7 கோடியே 37 இலட்சத்து 80 ஆயிரம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு நடவடிக்கையில், அப்பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டமும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 54,096 கஞ்சா செடிகளுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் வலானை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore