2026ஆம் ஆண்டுக்கான பெண்கள் T20 ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வணி, எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 13ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ளது.
அணியின் தலைவராக சமரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஹர்ஷிதா மாதவி சமரவிக்ரம துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடரில் இலங்கை மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.






