நடிகர் விக்ரமின் வீடியோவால் சர்ச்சை – அரிய வகை கிப்பன் தொடர்பில் விசாரணை

இந்திய நடிகர் சியான் விக்ரம், அரிய வகையைச் சேர்ந்த கிப்பன் ஒன்றுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

விக்ரமின் மகளின் மாமனாரும் தொழிலதிபருமான சி.கே. ரங்கநாதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த கிப்பன், சட்டவிரோதமாக வளர்க்கப்படுகிறதா என்பது தொடர்பில் வனத்துறை அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Lar Gibbon எனப்படும் இந்த கிப்பன், அழிவின் ஆபத்தில் உள்ள உயிரினமாகவும், சர்வதேச வனவிலங்கு வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் CITES விதிகளின் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினமாகவும் உள்ளது.

குறித்த கிப்பன் ஜூன் மாதம் மணிப்பூரிலிருந்து தமிழ்நாட்டின் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதனை விக்ரம் அதிகாரப்பூர்வமாக வாங்கியதாகவும் சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விக்ரம் பகிர்ந்த வீடியோ 24 மணி நேரத்திற்குள் நீக்கப்பட்ட நிலையில், தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் இன்றி இவ்வாறான அரிய வனவிலங்கை வளர்ப்பது தொடர்பில் வனவிலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை வனவிலங்கு காப்பாளர் யோகன் குலாலா, ரங்கநாதனை அவரது இல்லத்தில் சந்தித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

எனினும், கிப்பன் சட்டவிரோதமாக வைத்திருக்கப்பட்டதா என்பது அதனை எவ்வாறு பெற்றுக்கொண்டனர், இறக்குமதி செய்யப்பட்டதா மற்றும் தேவையான சட்டப்பூர்வ ஆவணங்கள்/அனுமதிகள் உள்ளனவா என்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(NDTV)

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore