இலங்கை – ஜப்பான் நட்புறவை மேலும் வலுப்படுத்த பேச்சுவார்த்தை

இலங்கை–ஜப்பான் நட்புறவு சங்கத்தின் தலைவர் Inoue Naoki தலைமையிலான குழுவினர், ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க அவர்களை நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளனர்.

இதன்போது, இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை வடமேல் மாகாண சபைக்கு அண்மையில் மூன்று அம்புலன்ஸ்களை வழங்குவதற்கு தமது சங்கம் ஏற்பாடு செய்திருந்ததை Inoue Naoki நினைவுகூர்ந்ததுடன், எதிர்காலத்திலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு சங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை–ஜப்பான் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதில் இத்தகைய ஒத்துழைப்புகள் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் டாக்டர் R. D. R. பெரேரா, உதவிச் செயலாளர் R. A. ருவன்பத்திரண உள்ளிட்ட இலங்கை–ஜப்பான் நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore