ருமேஷ் தரங்கவிற்கு சவால் விடுக்கத் தயாராகும் ஜேர்மனி வீரர்!

2026 ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஜேர்மனியின் ஜூலியன் வெபர் தங்கம் வென்றுள்ளார்.

அவர் எறிந்த தூரம் 90.40 மீற்றராகும்.

ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஈட்டி எறிதல் போட்டியில் 90 மீற்றருக்கும் அதிகமான தூரம் பதிவு செய்யப்பட்டது இதுவே முதன்முறை என வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் பிரித்தானியாவின் ஸ்டீவ் பேக்லி 1998 ஆம் ஆண்டில் 89.72 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அதற்கமைய, ஜூலியன் வெபர் 28 ஆண்டுகள் பழமையான சாதனையை முறியடித்துள்ளார்.

அவரது இந்த 90.40 மீற்றர் திறமை, இந்த ஆண்டில் ஈட்டி எறிதல் வீரர் ஒருவர் பதிவு செய்த இரண்டா#வது சிறந்த திறமையாகும்.

இது இலங்கையின் ருமேஷ் தரங்க பதிவு செய்த 92.62 மீற்றர் திறமைக்கு அடுத்தபடியாக உள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore