நாட்டின் பொருளாதாரம் குறித்து ரணிலிடமிருந்து எச்சரிக்கை அறிவிப்பு

வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமடையும் போது சர்வதேச நாணய நிதியத்துடனா (IMF) ஒப்பந்தம் நிறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் வெளிநாட்டு கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை இலங்கைக்கேற்படும் என்பதால், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

மத்திய வங்கி இவ்வருட முடிவில் 8 பில்லியன் டொலர்கள் நிலுவையில் இருக்கும் என எதிர்பார்த்துள்ளதாகவும், அவ்வாறானால் மேலும் 6 பில்லியன் டொலர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, அந்த 6 பில்லியன் டொலர்களைத் தேடுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய “யுத தெக்கட உர தீ” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore