வர்த்தகர்களுக்கு CAA முக்கிய அறிவிப்பு!

விற்பனைப் பொருட்களுக்கான பில், இன்வொய்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்

விற்பனைக்காக, களஞ்சியப்படுத்தல், விநியோகம் அல்லது காட்சிப்படுத்தலுக்காக வைத்திருக்கும் அனைத்து பொருட்களுக்கும் பில், இன்வொய்ஸ் அல்லது பொருட்களின் மூலத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வர்த்தகர்கள் வைத்திருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அறிவித்துள்ளது.

ஆவணங்களில் இடம்பெற வேண்டியவை: ▪️வழங்குநரின் பெயர் மற்றும் முகவரி
▪️ கொள்வனவு செய்த திகதி
▪️ கொள்வனவு விலை
▪️ பொருளின் வகை மற்றும் அளவு
▪️ தேவையான சந்தர்ப்பங்களில் Batch Number

குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மூலத்தை உறுதிப்படுத்த முடியாத வர்த்தகர்கள், CAA சோதனைகளின்போது சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனைகளின்போது பில் மற்றும் இன்வொய்ஸ்கள் பரிசோதிக்கப்படலாம். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொருட்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பொருட்களாக சமர்ப்பிக்கப்படவும் முடியும்.

எனவே, அனைத்து வர்த்தகர்களும் தங்களது விற்பனை நிலையங்களில் உள்ள பொருட்களுக்கான பில்கள், இன்வொய்ஸ்கள் மற்றும் ஏனைய கொள்வனவு ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு CAA அறிவுறுத்தியுள்ளது.

NewsWire

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore