அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக சுற்றுலா விசா பெற முயற்சிப்போருக்கு எச்சரிக்கை

‘Birth Tourism’ நோக்கத்திற்காக அமெரிக்கா செல்ல முயற்சிக்கும் விண்ணப்பதாரர்களின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்துடன் பயணம் செய்வது சுற்றுலா விசாவுக்கு அனுமதிக்கப்பட்ட நோக்கம் அல்ல என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நோக்கத்துடன் ஒருவர் அமெரிக்கா செல்ல முயற்சிப்பதாக தூதரக அதிகாரிகளுக்கு நியாயமான சந்தேகம் ஏற்பட்டால், B வகை சுற்றுலா விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும் என அமெரிக்க விசா விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.

இந்த கொள்கை 2020 ஜனவரி முதல் நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க விசா வழங்கப்பட்டிருந்தாலும், அது நாட்டிற்குள் நுழைவதற்கான உத்தரவாதம் அல்ல எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. இறுதியாக அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிப்பது U.S. Customs and Border Protection (CBP) அதிகாரிகளின் தீர்மானத்திற்கு உட்பட்டதாகும்.

சுற்றுலா அல்லது தற்காலிக பயணம் தொடர்பான அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் visitor visa பயன்படுத்தப்படுவது குறித்து அமெரிக்கா தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

NewsWire

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore