இலங்கையில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் புதிய டிஜிட்டல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், தென் மாகாணத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு சைபர் பாதுகாப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT), இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைந்து இந்தப் பயிற்சிகளை நடத்தியுள்ளன.
காலி, மாத்தறை மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
பயிற்சியில்,
🔹 புதிய சைபர் குற்றப் போக்குகள்
🔹 சமூக ஊடக மோசடிகள்
🔹 டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்தல்
🔹 தகவல் பாதுகாப்பு நடைமுறைகள்
🔹 சைபர் சம்பவங்களுக்கு விரைவான பதிலளிப்பு
🔹 விசாரணைகளின்போது டிஜிட்டல் ஆதாரங்களை முறையாகப் பாதுகாத்தல்
போன்ற விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தங்களது கடமைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்தகைய சைபர் பாதுகாப்புப் பயிற்சிகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக Sri Lanka CERT மற்றும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளன.
Newswire





