கொழும்பு மகசின் சிறைச்சாலையின் சுவருக்கு மேலாக தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்றை வீச முயன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதியை சிறைச்சாலை சுவருக்கு மேலாக வீசிய பின்னர், அதிலிருந்த பொருட்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குறித்த பொதியில்,
🔹 30 மீள்மின்னேற்றக்கூடிய பேட்டரிகள்
🔹 250 கிராம் சுண்ணாம்பு
🔹 50 கிராம் புகையிலை
🔹 வெற்றிலை
🔹 மாவா
ஆகிய பொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Newswire





