கொழும்பு, ஆகஸ்ட் 21:
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2027ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ பாடசாலை தவணை அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2027ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 04ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகள், முஸ்லிம் பாடசாலைகளுக்கான தனித்தனி தவணை அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஆண்டுக்குள் இடம்பெறும் பரீட்சைகள் மற்றும் பாடசாலை விடுமுறைகளும் அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், 2027ஆம் ஆண்டுக்குப் பொருந்தும் அரச விடுமுறை தினங்களின் பட்டியலையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்கு மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த அட்டவணை முக்கியமானதாக அமையும்.









