கொழும்பு கோட்டை, York Street பகுதியில் நேற்று (20) பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார்.
பெட்டாவை நோக்கிப் பயணித்த பேருந்து, வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வெளிநாட்டவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





