1909-ல் பிறந்தவர்… 117 வயதை எட்டிய உலகின் வயதான நபர்!

உலகின் வயதான உயிருடன் இருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பெண் எதெல் கேதர்ஹாம், தனது 117ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் திகதி இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் பிறந்த இவர், தற்போது சர்ரேயில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

Guinness World Records தகவலின்படி, 117 வயதை எட்டியதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் பிரித்தானியர் என்ற சாதனையையும் இவர் பெற்றுள்ளார்.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனாஹ் கனபாரோ லூகாஸ் 116 வயதில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உலகின் வயதான உயிருடன் இருக்கும் நபராக எதெல் கேதர்ஹாம் அங்கீகரிக்கப்பட்டார்.

இரண்டு உலகப் போர்களையும் கடந்து வந்துள்ள இவர், தனது 110ஆவது வயதில் COVID-19 தொற்றிலிருந்தும் மீண்டுள்ளார். மேலும், தனது 18ஆவது வயதில் தனியாக இந்தியாவுக்குப் பயணம் செய்து, அங்கு பிரித்தானிய குடும்பம் ஒன்றில் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றியிருந்தார்.

எனினும், உலக வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக பதிவான அதிகபட்ச மனித ஆயுட்கால சாதனையான 122 ஆண்டுகள் 164 நாட்கள் என்ற சாதனையை பிரான்ஸைச் சேர்ந்த ஜீன் கால்மெண்ட் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.

📌 117 ஆண்டுகள்… இரண்டு உலகப் போர்கள்… ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வாழ்க்கை!

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore