பிரபல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பொலிஸாரால் கைது!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் டெர்பி நகரில் இடம்பெற்ற இரவு விடுதி மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டர்ஹாம் அணி, டெர்பிஷயர் அணியை வீழ்த்திய பின்னர் வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து பிரைடன் கார்ஸை பொலிஸார் கைது செய்ததாகவும், பின்னர் எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்களும் அருகில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரைடன் கார்ஸ் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore