பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்னவின் சடலம் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது.
பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டைக்கு அருகிலுள்ள அடர்ந்த புதர் பகுதியில், பாறையொன்றின் மீது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் நேற்று (23) முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரது காரும் அப்பகுதியில் மீட்கப்பட்டிருந்தது.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையிலேயே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து மூன்று வகையான மருந்துகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உட்கொண்டு வைத்தியர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளைப் பயன்படுத்தி வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





