கின்னஸ் சாதனை படைத்த குத்துச்சண்டை வீரர் சுட்டுக்கொலை!

தென்னாப்பிரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜொலானி டெட்டே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

38 வயதான இவர், 2007–2008ஆம் ஆண்டுகளில் உலக குத்துச்சண்டை கூட்டமைப்பின் பிளைவெயிட் பிரிவிலும், 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் உலக குத்துச்சண்டை அமைப்பின் போட்டிகளிலும் உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

எம்தான்சேனே பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு காரில் இருந்து இறங்கியபோது, முகமூடி அணிந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் காரில் இருந்த 27 வயதான பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.

2017ஆம் ஆண்டு சிபோனிசோ கொன்யாவை வெறும் 11 வினாடிகளில் வீழ்த்தி கின்னஸ் சாதனை படைத்த ஜொலானி டெட்டேவின் மரணம் குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore