இலங்கையின் பிரபல மொடலிங் கலைஞரும், சர்வதேச ஆடை வடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சூலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46ஆவது வயதில் காலமானார்.
அவரது திடீர் மறைவு இலங்கையின் மொடலிங், ஆடை வடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக விளங்கிய சூலா பத்மேந்திரா, பல இளம் கலைஞர்களை சர்வதேச அளவில் முன்னேறுவதற்கு வழிகாட்டியுள்ளார்.
மேலும், ஆடை வடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டி பயிற்சி துறைகளிலும் சிறந்த நிபுணராக அவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அண்மைக்காலம் வரை பல முன்னணி மொடலிங் நிகழ்வுகள், ஆடை வடிவமைப்பு விழாக்கள் மற்றும் அழகிப்போட்டிகளில் அவர் தீவிரமாகப் பங்கேற்று வந்த நிலையில், அவரது மறைவு கலைத்துறையினரிடையே பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.





