கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 420 கிலோகிராம் ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் குறித்த கொள்கலன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பெருமளவிலான ‘ஐஸ்’ போதைப்பொருள் கொள்கலனுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில், குறித்த போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து கொள்கலன் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





