இலங்கையில் இன்று (31) அதிகபட்ச வெப்பநிலை 38.8°C ஆக வவுனியாவில் பதிவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு அடுத்ததாக பொலன்னறுவையில் 38.4°C, திருகோணமலையில் 38.1°C, மொனராகலையில் 37.1°C மற்றும் அனுராதபுரத்தில் 37.0°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவில் 36.7°C, மஹா இலுப்பல்லமவில் 36.1°C மற்றும் மத்தளவில் 35.6°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதேவேளை, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பநிலை ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்பட்டுள்ளது. கொழும்பில் 31.1°C, கட்டுநாயக்கவில் 31.2°C மற்றும் காலியில் 29.6°C அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நுவரெலியா இன்று பதிவான தரவுகளின்படி குறைந்த அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்ட பகுதியாக காணப்பட்டுள்ளதுடன், அங்கு 20.8°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும், யாழ்ப்பாணத்தில் 33.9°C, மட்டக்களப்பில் 34.8°C, பொத்துவிலில் 34.1°C, குருநாகலில் 33.3°C மற்றும் ஹம்பாந்தோட்டையில் 32.0°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.





